Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி புங்கனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவரது மகன் அகிலேஷ் திருச்சி திண்டுக்கல் சாலை பிராட்டியூர் அருகே பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 4 பேர் கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதற்கு பணம் கேட்டதற்காக அந்த 4 பேரும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அகிலேஷை கட்டையால் தாக்கியுள்ளனர். காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து புகாரின்பேரில் எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து  தாக்கியவர்களை தேடி வருகிறார்கள்.

error: Content is protected !!