Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருக்கு பளார்… பெண் கவுன்சிலர் ஆவேசம்

சேலம்  மாநகராட்சி கூட்டம் இன்று   மேயர் ராமச்சந்திரன் தலைமையில்  நடந்தது. அப்போது  அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி,  தனது  வார்டு,  கான்ட்ராக்ட் கூட,    அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது திடீரென இன்னொரு கவுன்சிலர்,  யாதவமூர்த்தி மீது  மிக்சர் பாக்கெட்டை தூக்கி வீசினார். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது  திமுக  பெண் கவுன்சிலர்   ஏதோ பேசிக்கொண்டு  யாதவமூர்த்தியை நோக்கி வந்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.  திடீரென சுகாசினி,   யாதவமூர்த்தியின் கன்னத்தில் பளாா் பளார் என அறை விட்டார்.  நிலைமை மோசமானதை அறிந்த  மற்ற கவுன்சிலர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.

மேயர் ராமச்சந்திரன் கூட்டம் முடிந்து விட்டதாக கூறி வெளியேறினார்.  ஆணையரும் வெளியேறினார். இதற்கிடையே  கவுன்சிலர் சுகாசினி,  தன்னை கூட்டத்தில் தாக்கி விட்டார்கள் என கூறி  மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

error: Content is protected !!