Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது… பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பக்ரிக்தக்கா பகுதியை சேர்ந்த பஞ்சு அருணாச்சலம் மனைவி முனியம்மாள் ( 64 ) இவர் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முனியம்மா வீட்டிற்கு வந்து முனியம்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து காதில் இருப்பது வெள்ளியா! தங்கமா? என கேட்டு உள்ளார் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென முனியம்மாள் கத்தி கூச்சலிட்டதால் கழுத்தை மர்ம நபர் மூதாட்டியின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் முனியம்மாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சக்கரக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் காந்திராஜன் என்கிற தமிழரசன் (29) இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் காரணமாக தமிழரசனை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
error: Content is protected !!