Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவசாய பயன்பாட்டிற்கு சாலை அமைக்க கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தை கூடம் கிராமத்திலிருந்து தங்கசாலை கிராமத்திற்கு செல்லும் சாலையை விவசாய இடுபொருள்களை எடுத்துச் செல்லவும், பயணம் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து வெளியே தெரிவதால் பயணிக்க மிகவும் சிரமமாகவும், இருசக்கர வாகனங்கள் பஞ்சராகி விடுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சாலை அமைப்பதற்காக கொட்டிய ஜல்லியை மீண்டும் எடுத்து சென்று விட்டனர். எனவே புதிய தார் சாலை அமைத்து தர வேண்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புள்ளம்பாடி இரண்டாம் நம்பர் பாசன வாய்க்கால் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமியிடம்,
விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

error: Content is protected !!