Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் மேற்கூரையுடன் நவீன சேமிப்புத் தளங்கள் திறப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்து, புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம்,

அதவத்தூரில் 6200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை திறப்பு விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சேமிப்பு கிடங்கு வளாகத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பாலமுருகன், வட்டாட்சியர் குணசேகரன், உதவி செயற்பொறியாளர் ராஜி, உதவி பொறியாளர் சிவக்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!