Skip to content

விஜய் நடத்தும் பாராட்டு விழா- நல்ல விஷயம் தான்… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த வேலை வாய்ப்பு முகாமில் முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர் கூறும் போது..,

முருகன் மாநாட்டிற்கு யாரும் எதிரி கிடையாது, தமிழக முதல்வரும் முதல் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசியல் கட்சிகள் அரசியல் மாநாடு நடத்தலாம், ஆனால் சாமியார் மாநாடு நடத்துகின்றனர்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரன் மற்றும் சிலர் குற்றவாளிகளாக இருக்கின்றனர் என அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டது குறித்த கேள்விக்கு..,

ஆதாரங்களை வைத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கும் போது இங்கு தானே இருந்தார். வெளிநாட்டு காச சென்று விட்டார். நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கலாம். செருப்பு வழங்கப்பட்ட பின்பு ஆதாரம் வெளியிட்டு என்ன பயன்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கு..

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு
தொண்டு செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் சென்றது வருத்தம் தான். நிறைய இடங்களில் மக்களே வருத்தப்படுகின்றனர். தொண்டர்களுக்கு வருத்தம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு கட்சியினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆனால் தோழமை கட்சிக்கு கொடுக்கப்பட்டது சகோதரர் துறை வைகோ வெற்றி பெற்று செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். வருகின்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிடுவதற்கான என்னுடைய குரல் ஒலிக்கும்.

அடுத்த காமராஜர் விஜய் என்று மாணவியின் தந்தை கூறியது குறித்த கேள்விக்கு..

காசு இருந்தாலும் கொடுப்பதற்கு மனம் வேண்டும். நிறைய சம்பாதிக்கிறார் உதவி செய்கிற மனசு இருக்கிறது கொடுக்கிறார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தோடு, தொங்கட்டான், மோதிரம் போடுவது நல்ல விஷயம் தான். ஆசையை சந்தோஷத்தில் அவர்கள் கூறுவது உண்டு. எப்போதும் காமராஜர் காமராஜர் தான் =, எம் ஜி ஆர் எம் ஜி ஆர் தான், கலைஞர், அண்ணா என அனைவரும் இருக்கின்றனர் அதை பெரிது படுத்த வேண்டாம் எனக் கூறினார்.

error: Content is protected !!