தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சாலையின் தவறான எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம், எதிரே வந்த லோடு வேன் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த முருகன் மற்றும் குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே கோர விபத்து: வேன் மீது பைக் மோதி 2 பேர் பலி
