Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் அருகே ஏரியில் ஒருவர் மர்ம சாவு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (62). பன்றி வளர்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அண்ணாதுரை பெரிய ஏரிக்கரையில், காவேரி டேங்க் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த குவாகம் போலீசார், அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணாதுரை மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அண்ணாதுரை எதற்காக அங்கு சென்றார் ? யாரேனும் கொலை செய்திருப்பார்களா? அல்லது தானாக தவறி விழுந்ததால் ஏற்பட்ட உயிரிழப்பா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏரியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால், போலீசார் பொதுமக்களை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த வேலுமணி என்பவர் இடையக்குறிச்சி பெருங்கோணம் ஏரியில் சுடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டார்.
ஏரியில் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்பு சம்பவத்தில் காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

error: Content is protected !!