Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

அதிமுக முன்னாள்  அமைச்சர்  சண்முகநாதன். இவர்  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்  எம்.எல்.ஏவாக இருந்தவர். இவரது மகன் ராஜா. இவர் தூத்துக்குடி  மாநகராட்சி  அதிமுக கவுன்சிலர்.  ராஜா மீது பல்வேறு   வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது சகோதரிக்கு சொந்தமான  300 பவுன் நகைகளை வாங்கி  மோசடி செய்தது உள்பட  ரூ.17 கோடி  வரை மோசடி செய்ததாக இவர் மீது வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ராஜா மலேசியாவுக்கு தப்பி ஓட சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை   மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது  செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
error: Content is protected !!