Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பைக் மோதியதில் கோஷ்டி மோதல்… 5 பேர் கைது!

திருச்சியில் பைக் மோதியதில் கோஷ்டி மோதல்… 5 பேர் கைது!

திருச்சி, கிராப்பட்டி மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த கிதியோன் ஹாரிசன் (26) என்பவர் கடந்த 17ம் தேதி அன்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கிராப்பட்டி பாலம் அருகே வந்தபோது, எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருச்சி எடமலைப்பட்டி.புதூர் தெற்கு மேட்டுத் தெருவைச் சேர்ந்த முகமது ரெபாய் (வயது26) மற்றும் இதாயத்துல்லா (39) ஆகிய 2 பேரும் கிதியோன் ஹாரிசனின் வாகனத்தின் மீது மோதியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது முகமது ரெபாயும், இதாயத்துல்லாவும் சேர்ந்து கிதியோன் ஹாரிசனை திட்டி, கையால் தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து , முகமது ரெபாய் , இதாயத்துல்லா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதே சம்பவத்தில் காயமடைந்த முகமது ரெபாய் விபத்து ஏற்பட்டபோது, கிதியோன் ஹாரிசன், அவரது சகோதரர் அஜய் (28) மற்றும் மயிலவாகன சுவாமி தெருவைச் சேர்ந்த மார்க் ஜோயல் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து தன்னை, கையால் தாக்கியதில் முகமது ரெபாய்க்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்புகாரின் பேரில் எ.புதூர் போலீசார் அஜய், கிதியோன் ஹாரிசன் மற்றும் மார்க் ஜோயல் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!