Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

திருச்சி மாநகராட்சியில் உள்ள கோட்ட அலுவலகத்தில் சொத்துவரி,குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் தீவிர வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. சொத்து வரி மற்றும் வரியில்லா இனங்களில் இரட்டை பதிவு மற்றும் வரிவிதிப்பில் உள்ள குறைபாடுகள் களைய இன்று   5 கோட்ட அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில் பிரதி மாதம் 2 வது சனிக்கிழமைகளில் 5 கோட்ட அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறும்.  வரிவிதிப்பில் உள்ள தங்களுடைய குறைகளை முகாம் நாளில் தெரிவித்து சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பொது மக்கள் தங்களுடைய வரிகளை எளிதில் செலுத்த தினசரி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் சனிக்கிழமை -ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 9.00 மணி முதல் மதியம் 200 மணி வரை வரி வசூல் மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!