Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மன்னர் ராஜகோபால் தொண்டைமான் பிறந்தநாள் : சிலைக்கு அமைச்சர் மாலை

புதுக்கோட்டையை ஆட்சி செய்த கடைசி மன்னர்  ராஜகோபால் தொண்டைமானின் 103வது பிறந்தநாள் விழா இன்று   தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மன்னர் ராஜகோபால் தொண்டைமான் சிலைக்கு,  அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் மு. அருணா,  மேயர் திலகவதி செந்தில் ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில்  சட்டமன்ற உறுப்பினர்கள்   முத்துராஜா,  சின்னதுரை , புதுக்கோட்டை துணை மேயர் லியாகத் அலி, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், அவரது கணவர் ராஜகோபால தொண்டைமான்,   முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் மற்றும்
பலர்  கலந்து கொண்டனர்.

error: Content is protected !!