Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், சார் பதிவாளர் அலுவலகத்தில், அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அன்பரசன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருண் பிரசாத் ஆகியோர், நேற்று மதியம், சுமார் 1:30 மணிக்கு திடீரென சோதனை செய்தனர். அலுவலகத்திற்குள் வெளியாட்கள் யாரும்அனுமதிக்கப்படவில்லை. சோதனையில், சார் பதிவாளர் செல்வம் மேஜையில் இருந்து, 52 ஆயிரம் ரூபாயும், அவரது அறையில் இருந்த பத்திர எழுத்தர் முருகனாந்தம், மற்றும் பத்திர எழுத்தர் உதவியாளர் வெங்கடேஷ் ஆகியேரிடம் இருந்து 18 ஆயிரம் ரூபாயும் என 70 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம் லஞ்சமாக பெறப்பட்டாத என்ற அடிப்படையில், சார் பதிவாளர் செல்வத்திடம், சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!