Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுவை: 3 எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா

புதுச்சேரி மாநிலத்தில்  என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு  என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக இருக்கிறார்.  பாஜகவை சேர்ந்த  ராமலிங்கம், அசோக்பாபு,  வெங்கடேசன் ஆகியோர்  நியமன எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.

இந்த நிலையில்  நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை 3 பேரும் சபாநாயகர் செல்வத்திடம் கொடுத்தனர். முன்னதாக  பாஜக அமைச்சர்  நமச்சிவாயம் ,பாஜக தலைவர் செல்வகணபதிஆகியோர்  முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஆகியோரை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து  ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

ராஜினாமா செய்த 3 பேருக்கு பதில் வேறு 3 பேரை  எம்.எல்.ஏக்களாக நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டு உள்ளது. அவர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி  வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தொகிறது.

error: Content is protected !!