Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் தெருநாய்கள்-வளர்ப்பு பிராணிகளையும் விஷம் வைத்து கொல்வதாக புகார்..

கரூர், வாங்கபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஒரு சமூக ஆர்வலர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனு குறித்து சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.. நான் வாங்கபாளையத்தில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் அடிக்கடி தெரு நாய்கள், பூனைகள் மற்றும் புறா போன்ற பறவைகள் இறந்து கிடக்கும். இது குறித்து தீர விசாரித்த பொழுது வெண்ணமலையில் வசிக்கும் டிரைவர் பாலு என்பவர் தான் காரணம் என்பது தெரிய வந்தது. மேலும், பாலு என்பவர் விஷ மருந்து ஸ்பிரே மூலம் நாய்களை கொலை செய்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை ஆதாரமாகக் கொண்டு டிரைவர் பாலு மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

error: Content is protected !!