Skip to content

நிகிதாவின் குடும்பமே Fraud”- கணவர் பரபரப்பு புகார்..

திருபுவனம் அஜித் கொலைக்கு காரணமான நிகிதாவும், அவரது குடும்பமே Fraud என தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் கூறியுள்ளார்.

திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரின் பேரில் காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் என்பவர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக, நகை திருட்டு புகாரளித்த மருத்துவரான நிகிதா மற்றும் அவரது தாய் ஸ்ரீதேவி மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் நிகிதா மீது புகார் அளித்துள்ளார். போலீசில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிக்கிதாவை எனக்கு 21 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். திருமண மோசடியில் பாதிக்கப்பட்டதில் நானும் ஒருவன். நிக்கிதாவுடன் ஒரு நாள் தான் என்னோட திருமண வாழ்க்கை. திருமணம் செய்துகொண்டு, பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடுவது நிகிதாவின் வழக்கம். மணமகன்கள் மீது வரதட்சணைக் கொடுமை புகார் அளித்து பணம் பறிப்பதுதான் நிகிதாவின் வேலை. பல குடும்பங்களை சிதைத்துவிட்டு தப்பி விடுவார். பால், பழம் சாப்பிடுவதற்குள் நிகிதா ஓடி விட்டார். நிகிதாவுக்கு உயர் அதிகாரிகள் பலருடன் தொடர்பு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் நிகிதாவுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் இப்போதும் பணியில் உள்ளனர். முன்னாள் எஸ்பிக்கள் பலர் நிகிதாவுக்கு உதவி செய்துள்ளனர்” என்றார்.

error: Content is protected !!