Skip to content

திருச்சியில் நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை…

திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வந்தார் .திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ,பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்திர பாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன்,மாநகரச் செயலாளர்கள் மாநகராட்சி மேயர் அன்பழகன்,மண்டல குழு தலைவர் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் திரண்டு வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு சென்றார்.அங்கு திருச்சி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, அருண்நேரு எம்.பி , மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி வரவேற்றார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு,ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளை

பாராட்டி கௌரவித்தார்.அதைத்தொடர்ந்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என கேட்டறிந்தார். பின்னர், தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்,திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, செந்தரபாண்டியன், கதிரவன், ஸ்டாலின் குமார்,மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,மத்திய மாவட்டம் முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,அந்த நல்லூர் முன்னாள் சேர்மன் துரைராஜ், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ் கமால் முஸ்தபா ,நாகராஜன் காஜாமலை விஜய்,ராம்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம் ,புத்தூர் தர்மராஜ்,வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர். சிங்காரம், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் முள்ளிப்பட்டி பால்ராஜ், வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார், முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன்,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,
மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ் , வாமடம் சுரேஷ், மார்சிங் பேட்டை செல்வராஜ்,தனசேகர்,பி ஆர் பி பாலசுப்ரமணியன், மூவேந்திரன்,
கவுன்சிலர்கள் ராமதாஸ் புஷ்பராஜ் மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,விஜயா ஜெயராஜ், கவிதா செல்வம்,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புங்கனூர் தாமோதரன், நிர்வாகிகள் பிராட்டியூர் மணிவேல்,இன்ஜினியர் நித்தியானந்தம்,அரவானூர் தர்மராஜன் ,சர்ச்சில், கிங்,சோலை பாஸ்கர்,கருத்து கதிரேசன்,அபூர்வா மணி, எம்.ஆர்.எஸ்.குமார்,ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்..

error: Content is protected !!