பாக் நீரிணையில், நேற்று (புதன்கிழமை) சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இந்திய மீன்பிடி படகு ஒன்று டெல்ப்ட் தீவு அருகே பவளப்பாறையில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. இலங்கை கடற்படையினர் 11 இந்திய மீனவர்களை மீட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
