செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே மேலகண்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. மீட்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
