தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் சுற்றுலா பயணத்தை முடித்து விட்டு கேரளா திரும்பியபோது, சுற்றுலாப் பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து தீ விபத்துக்குள்ளானது. பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கியுள்ளனர். பெரியகுளம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
