ஆந்திர மாநிலம் துமந்துனிகுடம் தொகுதியில் நடைபெற்ற மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா கட்சி வேட்பாளர் திவ்யா (28), வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் உயிரிழந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அவர் மறைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 350 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தனது வெற்றியை காணாமலேயே திவ்யா உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் ஜனசேனா கட்சியினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
மாரடைப்பால் உயிரிழந்த ஜனசேனா வேட்பாளர்
