Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இருசக்கர வாகனம் திருட்டு -2பேர் கைது

கோவில்பட்டியில் பணம் கேட்டு சிறுவனை கடத்தி தாக்கிய 4 பேர் கைது

திருச்சியில்

போதை மாத்திரை விற்ற 6 பேர் கைது

திருச்சி நவ 7

திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை, உறையூர் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக அந்த அந்த கோட்டத்துக்கு உட்பட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நவம்பர் 6 ஆம் தேதி போலீசார் சோதனை மேல் கொண்டனர் அப்போது காந்தி மார்க்கெட் பூக்கொள்ளை பகுதி அருகே போதை மாத்திரை விற்ற தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கிஷோர் ( வயது20 ) போலீசார் கைது செய்தனர்
இதேபோன்று பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்ற காஜாபேட்டை பகுதியை சேர்ந்த அப்துல்லா ( வயது42 ) ,திருவரம்பூர் பகுதியில் சேர்ந்த அப்துல் ராசா (வயது35) மற்றும் 1 பெண், மற்றும் உறையூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற
உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த டைட்டஸ் ஆண்ட்ரூ (வயது20 ) மற்றும் சோமரசம் பேட்டையைச் சேர்ந்த ஜீவன் (வயது19 ) ஆகியோரை போலீசார் கைது செய்து இவர்களிடமிருந்து 178 போதை மாத்திரைகள், 6 செல்போன், ரூ 18930 பணம்,இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இருசக்கர வாகனம் திருட்டு – இருவர் கைது

​ திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த காமேஸ்வரன் (23) இவரது இருசக்கர வாகனம், கடந்த 5 அன்று இரவு அவரது வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தபோது திருட்டு போனது. இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தொடர்புடைய பன்ருட்டி தாலுகாவைச் சேர்ந்த யுனுஸ்தீன் ராக்
க்கி (26) மற்றும் திருச்சி சின்னசாமி நகரை சேர்ந்த சேர்ந்த சையத் முனீர் ரஹ்மத் (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

​
திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்

கைதிகள் மீது வழக்கு

திருச்சி நவ 7-

​திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கடந்த 5 ஆம் தேதி அன்று சிறைக் காவலர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, அங்கிருந்த கைதிகளிடம் இருந்து மொத்தம் 40 கிராம் கஞ்சா மற்றும் 2000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிறைக்கைதியான பீர் முகமது (வயது20) மற்றும் அபிஷேக் (வயது22) ஆகியோர் மீது கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சிறைக்குத் திரும்பும்போது கஞ்சா கடத்தி வரப்பட்டது என தெரியவந்துள்ளது.

திருச்சியில்

​தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை –

ஒருவர் கைது

திருச்சி நவ 7-​ திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரிமேடு பேருந்து நிலைய சந்திப்புப் பகுதியில் வெளி மாநில லாட்டரி எண்கள் மற்றும் 3 இலக்க எண்கள் எழுதி விற்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சோதனை நடத்தி செந்தில்குமார் (வயது25) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி தாள்கள், ரூ. 4,100 ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

​

error: Content is protected !!