Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழவியாபாரிடம்பணத்தைப் பறித்த 2 பேர் கைது

கோவில்பட்டியில் பணம் கேட்டு சிறுவனை கடத்தி தாக்கிய 4 பேர் கைது


அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 33). இவர் திருச்சி தில்லை நகரில் தள்ளுவண்டி கடையில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ந் தேதி இவர் தென்னூர் ரயில்வே ட்ராக் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அன்பரசன் தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்த வீரப்பன் என்கிற ராஜ்குமார் (வயது 25), தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த குருமூர்த்தி என்கிற காட்டு ராஜா (வயது 25 ஆகியோரை கைது செய்தனர்.

இதே போன்று திருச்சி மத்திய சிறையில் சிறை துறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் குழுவினர் நேற்று சிறை வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சமயபுரம் சோழன் நகரை சேர்ந்த பீர்முகமது (வயது 20) என்ற கைதியிடம் 35 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் நடத்தி விசாரணையில் சிந்தாமணி அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த அபிஷேக் (வயது 22) என்பவரிடமும் 5 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிறை துறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் கேகே நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சூரியா என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!