Skip to content

சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை 345 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்க வைக்கப்படும் நெல் மூட்டைகள் அரவைக்காக வெளியூர்

மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். இதே போல் சேமிப்பு கிடங்கில் இருந்து தலா 4,000 டன் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்து 21 வேகன்களில் சென்னை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2,000 டன் என 4,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

error: Content is protected !!