Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கத்தி முனையில் செயின் பறித்த 7 பேர் 48 மணி நேரத்தில் கைது…

வேலாயுதம்பாளையம் அருகே தனியார் பள்ளி தலைவரை வழிமறித்து தாக்கிவிட்டு செயின் திரட்டில் ஈடுபட்ட 7 நபர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் வடக்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி(67) .இவர் கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கருணாநிதி பள்ளிக்கு வந்து விட்டு வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நொய்யல்– வேலாயுதம் பாளையம் நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 8-ஆம் தேதி சென்று கொண்டிருந்தார் .

அப்போது முத்தனூர் அருகே முனிநாதபுரம் பகுதியில் தார் சாலை ஓரத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பு அருகே கருணாநிதி சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் அவரை நோட்டமிட்டு பின்னால் வந்த வாலிபர்கள் திடீரென கருணாநிதியின் ஸ்கூட்டருக்கு முன்னால் சென்று தனது இரு சக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தினார்கள். இதனால் நிலை தடுமாறிய கருணாநிதி தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அந்த வாலிபர்களைப் பார்த்து எதற்காக எனது ஸ்கூட்டருக்கு முன்னால் வாகனத்தை குறுக்கே நிறுத்தினீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் கடைசியாக அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத வாலிபர் திடீரென கீழே இறங்கி வந்து அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்காட்டி கருணாநிதி அணிந்திருந்த 10பவுன் தங்கச் செயினை கழற்றித் தருமாறு மிரட்டி உள்ளார்.

அப்போது கருணாநிதி தான் அணிந்திருந்த தங்கச்செயினை கையில் இருக்கமாக பிடித்துக் கொண்டார். அதை பார்த்த மற்ற இளைஞர்களும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து தார் சாலை ஓரத்தில் தகராறுசெய்தால் அந்த வழியாக வருபவர்கள் தங்களை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கருணாநிதியை பிடித்து அருகில் இருந்த தென்னந்தோப்புக்குள் உள்ள பள்ளத்தில் கீழே தள்ளிவிட்டு மூவரும் சேர்ந்து கருணாநிதியை குரல்வளையை பிடித்து இறுக்கி பலமாக தாக்கி அவர் அணிந்திருந்த 10-பவன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டனர்.

அவர்களுடன் காரில் வந்த மர்ம நபர்கள் கருணாநிதியை கடத்தும் நோக்கில் வந்துள்ளார்.

சாலையில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

அதிர்ச்சி அடைந்த கருணாநிதி தான் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார்.

அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .
பின்னர் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார் .

இந்நிலையில் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் கிடைத்த ஆதாரங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தினார் .

விசாரணையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக சென்னை எர்ணாவூர் கடற்கரை சாலை முதல் தெரு நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன்( 46), கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே சோமூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்கிற கிஜாப்பாய்( 25 ), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கிழக்குத் தெருவை சிலம்பரசன் (28 ),பரமத்தி வேலூர் அருகே தண்ணீர் பந்தல் மேடு அம்மன் நகர் கார்த்திகேயன் என்கிற அப்துல் ஷாருக் (42 ). பரமத்திவேலூர் அருகே படமுடி பாளையம் ராமசாமி (41 ), பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பஜனை மடத் தெரு பகுதியைச் சேர்ந்த சத்யராஜ்( 31) , பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாரறு நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல்( 53) ஆகிய 7 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 7 பேரும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 10 பவுன் தங்கச் செயின் கத்தி இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஏழு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் ஏழு பேரும் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் ஏழு பேரையும் சிறையில் அடைக்கப்பட்டனர் .

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா தெரிவித்ததாவது வீடுகள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பல்வேறு வியாபார நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அவசியம் தரமான கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு கேமராக்கள்

பொருத்தப்படுவதால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை விரைவில் கைது செய்ய உதவும் .இது போன்ற பல வழக்குகளை சிசிடிவி கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து செயின் பறிப்பு ,திருட்டு குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

குறிப்பாக:
பூமிநாதன் என்பவர் மீது ஏற்கனவே சென்னை ஆவடி, குளத்தூர், புளியந்தோப்பு, நாகப்பட்டினம், நாமக்கல், திருச்சி, வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவக்குமார் என்பவர் மீது கரூர் வெள்ளியணை, பசுபதிபாளையம், தான்தோன்றி மலை, வெங்கமேடு ஆகிய காவல் நிலையங்களில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலம்பரசன் என்பவர் மீது திருச்சி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சத்யராஜ் என்பவர் மீது நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செயின் பறிப்பு வழக்கில் குற்றவாளிகளை 48 மணி நேரத்திற்குள் கைது செய்த வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் மற்றும் குற்றப்பிரிவு போலீசாருக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா நேரில் பாராட்டு தெரிவித்தார்.

error: Content is protected !!