திருச்சி கருமண்டபம் ஐஓபி காலனி சேர்ந்தவர் சிவா . இவரது மனைவி நவீஷா (28) . இவர் எம் இ.மேற்படிப்பு படித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில் கணவர் சிவா பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மாமியார் வீட்டில் இருந்த நவீஷா இன்று தனது ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சிடைந்து உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் சடலமாகதொங்கிய நபிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீஷா இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

