Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அயோத்தி ராமர் கோவிலில் ரூ.200 கோடி மோசடி

கடந்த 2024-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடை பணத்தில் சுமார் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு (SIT), தனது 20 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தனியார் ஊழியர்களுக்கு முறையான சோதனைகளோ, பாதுகாப்பு விதிமுறைகளோ பின்பற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள எஸ்சிடி, வெறும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை மாத சம்பளம் வாங்கும் சாதாரண ஊழியர்கள் சிலர், வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே ரூ.40 லட்சம் முதல் ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலங்களை வாங்கியதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 17 பேர் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட லவ்குஷ் மிஸ்ரா போன்றோரின் வீடுகளில் நடத்திய சோதனையில், மாட்டுச் சாணக் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரொக்கம், தங்கம் உட்பட இதுவரை ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அம்மாநில யோகி ஆதித்யநாத் அரசுக்குக் கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!