Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

கரூர் அருகே இரவு நேரத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் கையில் கடப்பாரையுடன் நடமாடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் நடமாடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

வெள்ளாளப்பட்டி கிராமத்தில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கையில் கடப்பாறையுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மின்விளக்குகளை எரியவிட்டதும், சுதாரித்துக் கொண்ட கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இரவு நேரத்தில் புலியூர் பகுதியில் முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!