Skip to content

டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணி 21.11.25 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மலைக்கோட்டை அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள 40 அடி உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய் நெய் ஆகியவை கலந்து ஊற்றி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீப திருவிழாவின் ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் திரு பா சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள் திரு கருணாநிதி, திரு கலைச்செல்வி திரு ஸ்ரீதர் திரு கோவிந்தராஜு மற்றும் திருக்கோயில் உதவிய ஆணையர் செயல் அலுவலர் திரு கா அருட் செல்வன் மற்றும் உள்துறை கண்காணிப்பாளர் , பேஸ்கார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!