Skip to content

உதயநிதி முதல்வர் ஆவார்”- கமல்ஹாசன்

சென்னை பாரிமுனையில் நடைபெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், “திமுக என்பது ஒரு உணர்வு. நான் கண் திறந்தபோது பார்த்த சூரியன் இதுதான். உதயநிதி முதலமைச்சர் ஆவார். அவருக்கு இந்த அரங்கத்தில் பாராட்டு கூட்டம் நடத்தப்படும், அப்போது இந்த அரங்கம் பத்தாது. திமுகவின் கொள்கையும், மநீமவின் கொள்கையும் ஒன்றுதான். வந்தவர் எல்லாம் வாகை சூட நினைத்தால் எங்கள் போர்க்குணம் விடாது. தேர்தலில் மநீம சொன்ன ஆலோசனைகளையும் திமுக அரசு செயல்படுத்தி காட்டியது. அரசியலுக்காக திமுகவுடன் நான் சேர வில்லை” என்றார்.

error: Content is protected !!