திமுக மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 49ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதமிழகம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை திமுக சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஏற்பாட்டில் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டியும்,மேலும் பல்வேறு பொறுப்புகளை வகுத்து மக்கள் சேவை செய்ய வேண்டியும்
அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் தங்கத்தேர் இழுத்து மாசாணியம்மனை வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் சிங்காரம் சீனிவாசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி கூறுகையில் …
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல்
இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து முதலமைச்சரின் ஆணைகினங்க அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறார். தற்போது இளைஞர்கள் மட்டுமில்லாமல் கழக முன்னோடிகள் இளம் தலைமுறையினர் பாராட்டி வருகின்றனர் உழைப்பினால் உயர்ந்துள்ளார். இன்று போல் என்றும் வாழ தங்க தேர் இழுத்து வழிபாடு செய்ததாக தெரிவித்தார்.

