இலங்கை கடலில் உருவான புயல் சின்னம் இலங்கையை வெள்ளத்தால் மூழ்கடித்து 50 க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில் இப்போது தமிழ்நாடு நோக்கி இந்த புயல் வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், கீழத் தோட்டம், புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் ஆகிய துறைமுக பகுதியில் உள்ள 150 விசைப்படகுகள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் 2000க்கு மேற்பட்ட பைபர் படங்கள் மற்றும் பாய்மரப்படகு உள்ளான இதில் மீன் பிடிக்கச் செல்லும் பத்தாயிரம் மீனவர்கள் தஞ்சை கடற் பகுதியில் உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அதோடு துறைமுகங்களில் உள்ள படகுகளை பாதுகாப்பான இடத்தில் மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தி வருகின்றனர். மேலும் அதிராம்பட்டினம் கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது புயல் எந்தப் பகுதிக்கு வரப்போகிறது என்று அச்சத்தோடு மீனவர்கள் உள்ளனர். தொடர்ந்து ஏழு தினங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. மாநில மீனவ நலவாரிய துணைத் தலைவர் தாஜுதீன் மீனவர்களுக்காக இதுபோன்று மழைக்காலங்களில் புயல் காலங்களிலும் உணவு கூட இல்லாமல் மீனவ குடும்பங்கள் சிரமப்படுகின்றன அரசு மழைக் கால நிவாரண நிதி கொடுக்கின்றனர். இந்த நிதி மீனவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் தமிழக அரசு மீண்டும் இது போன்ற புயல் நேரத்தில் கஷ்டப்படும் மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசே கேட்டுக்கொள்கிறேன் என்று மீனவர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளனர் . மேலும் தொடர் மழை பெய்து கொண்டு உள்ளது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது செல்லுக்குறிச்சி ஏரிக்கு தண்ணீர் அதிகரித்து சர்க்கியில் வழிந்து ஆறு போல் ஓடுகிறது தாழ்வான பகுதியில் உள்ள குடிசை வீடுகள் மழைநீர் சூழ்ந்துள்ளன தொடர்ந்து மழைப்பொழிவு இருப்பதால் குடிசை வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை முகாம் அமைத்து முகாமிற்கு தங்க வைக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

