Skip to content

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அந்த வகையில் இன்று (டிச., 01) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 குறைந்தது. ஒரு சிலிண்டர் ரூ.1,739.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த செப் 01 ம் தேதி ரூ.51.50, ஆகஸ்ட் 1ம் தேதி ரூ.33.50, ஜூலை 1ம் தேதி ரூ.58.50, ஜூன் மாதம் ரூ.24 விலை குறைந்தது. கடந்த அக்டோபர் 1ம் தேதி ரூ.16 உயர்ந்தது. நவம்பர் 1ம் தேதி ரூ.4.50 குறைந்தது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. இம்மாதம் அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே விலையில் வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!