கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த
இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதைபடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திருவறும்பூர் கூத்தைபார் பகுதியை சேர்ந்த ரியாஸ் கான் ( 25) முகமது உசேன் ( 25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவரிகளிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். பிறகு இருவரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது
திருச்சி பொன்மலை ரெயில்வே கம்பி கேட் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த திருவெறும்பூர் வேங்கூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (38)என்ற வாலிபரை போலீஸ் எஸ்ஐ கமலஹாசன் கைது செய்து அவரிடம் இருந்து 60 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளார். பிறகு அவரை ஜாமீனில் விடுதலை செய்தார்.
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
திருச்சி பொன்மலை துர்க்கை அம்மன் கோவில் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை எஸ்ஐ சந்துருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சந்துரு தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த அரியமங்கலம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாஷ் (24) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஹீபர் ரோடு ரேசன் கடை அருகில் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த கோரிமேடு பகுதியை சேர்ந்த வெற்றி செல்வம்( 20) என்ற வாலிபரை எஸ்ஐ குமார் கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளார்.

