Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில்  2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இன்று  காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  கலெக்டர் பிரதீப் குமார் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.   திருநாவுக்கரசர் எம்.பி., ஐஜி கார்த்திகேயன் மற்றும் திமுகவினர்  உள்பட ஏராளமானோர் வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும் முதல்வர் காரில் திருவாரூர் புறப்பட்டு சென்றார். முதல்வரின் வருகையை ஒட்டி திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் செல்லும் வழியில் தஞ்சை மேரிஸ் கார்னரில் உள்ள  முன்னாள் அமைச்சர் உபயதுல்லா இல்லம் செல்லும் முதல்வர் அங்கு உபயதுல்லா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.  பின்னர் அங்கிருந்து திருவாரூர் செல்கிறார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!