ராமநாதபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இதையடுத்து, தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை விரைந்து அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
