திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வில் இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது. அப்போது, தூணில் தீபம் ஏற்றுவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி முறையீடு
