பெண் மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் டி.ஜி.பி.யைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அருள் விக்னேஷைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சிங்கப்பெண் படையை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் புகார்!
