சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி நடத்தும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. நாளை (டிச.,17) காலை சென்னை எழும்பூரில் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அதிமுக, தவெக, பாஜக, நாதக உள்ளிட்ட பல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் அதிமுக பங்கேற்காது என கூறப்படுகிறது. அதிமுக கூட்டணிக்குள் பாமகவின் ராமதாஸ், அன்புமணியை கொண்டு வர முயற்சி நடக்கும் நிலையில், அன்புமணி தனியாக நடத்தும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது என கூறப்படுகிறது.

