Skip to content

கரூர் கல்யாண பசுபதீஸ்வர் கோவிலில் பிரதோஷ விழா.. குவிந்த பக்தர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷ விழா: இந்த ஆண்டின் இறுதி பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்

ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.

பிறகு நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர

ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தை காண கருர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!