Skip to content

தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்க ளின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவர் வழக்கம்போல் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

இதை நோட்டமிட்டு 2 மோட்டார் சைக்கிளில் வெளியில் காத்திருந்த மாணவர்கள் சிலர் பள்ளி மாணவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியதுடன், அவரை மிரட்டி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலு வலர்கள் பார்த்தபோது மாணவர்கள் சிலர் பிளஸ்-2 மாணவரை தாக்கி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தஞ்சை நகர மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்
கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவர் சுமார் 2 1/2 மணி நேரத்திற்கு பிறகு வீடு திரும்பினார். பின்னர் போலீசார் கடத்தப்பட்ட மாணவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட பள்ளி மாணவருக்கும், தஞ்சை அரசு கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவர் ஒருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர் கல்லூரி மாணவரை தனது சக நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்குப் பழிக்குப் பழியாக கல்லூரி மாணவர் தனது சக நண்பர்களை அழைத்து கொண்டு பள்ளி மாணவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தஞ்சை செண்பக புரத்தை சேர்ந்த 17 வயது அரசு கல்லூரி மாணவர், தஞ்சை மனோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினைவேல் (19), பிள்ளையார்பட்டி சேர்ந்த 16 வயது சிறுவன், ரெட்டிபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், பள்ளி மாணவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தஞ்சை மேற்கு போலீசார் மேற்கண்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சையில் பழிக்கு பழியாக நடந்த இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!