கரூரின் முக்கிய சாலைகளில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகத்தைக் கண்டு, பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் அதன் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு சர்க்கஸ் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளுக்காகத் தங்களது ஒட்டகங்களைப் பயன்படுத்தி

வருகின்றனர்.
இவர்கள் கடந்த சில நாட்களாகத் திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக இரண்டு ஒட்டகத்தை அழைத்துக்கொண்டு கரூர் வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இந்த ஒட்டகம் கரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய கடைவீதிகள் வழியாகச் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வியப்புடன் அதைப் பார்த்தனர்.
தமிழகத்தில் ஒட்டகங்களைப் பார்ப்பது அரிது என்பதால், பலரும் தங்களது மொபைல் போன்களில்

ஒட்டகத்துடன் நின்று சிறுவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.
ஒட்டகத்தைச் சவாரி செய்ய விரும்பும் பொதுமக்களுக்கு 100 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
குறிப்பாக இளைஞர்கள் மிகவும் உற்சாகத்துடன் ஒட்டகத்தின் மேல் அமர்ந்து சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகம், கரூரின் பரபரப்பான சாலைகளில் மெதுவாக நடந்து சென்ற காட்சி சிறிது நேரம் அந்தப் பகுதியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

