மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4 – ந் தேதி தமிழகம் வருகிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும்
மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற
தேர்தல் பிரச்சார யாத்திரை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக
டில்லியில் இருந்து தனி விமான மூலம் 4 – ந் தேதி திருச்சி வருகிறார் பின்னர்
இங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர் புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருச்சி வரும் அமித்ஷா இரவு
கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் மாரியாட் ஹோட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார் பின்னர் மறுநாள் (5-ந் தேதி)
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
அதன் பின்னர் திருச்சியில் நடைபெறும் நம்ம ஊரு மோடி ஜி பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த பொங்கல் விழா நிகழ்வு மன்னார்புரம் நான்கு ரோட்டில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.அதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் முன்னேற்பாடுகள் செய்யும் பணி இன்று தொடங்கியது.
இதற்கான கால்கோல் விழா இன்று காலை நடைபெற்றது இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு கால்கோல் விழாவை தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன், அழகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் இல.கண்ணன்,
மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் எம்.பி.முரளிதரன், மகளிர் அணி மாநிலத் துணைத் தலைவர் புவனேஸ்வரி,
மேற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கவுதம் நாகராஜன்,ஊடகப் பிரிவு மாநில செயலாளர் சிவக்குமார்,ஊடகப்பிரிவு திருச்சி மாவட்ட தலைவர் முரளி,
மாவட்டச் செயலாளர் கும்ப குறிச்சி பழனிச்சாமி,
மாநிலச் செயலாளர் புகழ்,திருவெறும்பூர் தொகுதி பொறுப்பாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

