Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடும் குளிர் மற்றும் பனிமூட்டம்: ஜார்க்கண்டில் பள்ளிகளுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. விடிய விடிய நிலவும் பனிமூட்டம் மற்றும் உறையவைக்கும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் அடர் பனிமூட்டம் காரணமாக, மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் வரும் ஜனவரி 8-ம் தேதி (வியாழக்கிழமை) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் வழக்கம் போல பள்ளிக்கு வருகை தந்து, கற்பித்தல் பணி அல்லாத இதர அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!