Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மை பணியாளர் பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

ஆலந்தூர்: குன்றத்தூர் 3ம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி ராஜேஸ்வரி (58). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு செல்ல பரங்கிமலை பட்ரோடு வழியாக நடந்து வந்துள்ளார். அப்போது, கிண்டி நோக்கி வேகமாக வந்த ஆட்டோ, ராஜேஸ்வரி மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிண்டி லேபர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரசுராம் (34) என்பவரை கைது செய்து விசராணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!