Skip to content

வால்பாறை…புதைத்த சடலம் வௌியே கிடந்த அவலம்.. கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்துள்ளது இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, வருவாய் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவப்பகுதிக்கு சென்று பார்த்தபோது சமீபத்தில் அப்பகுதியில் புதைக்கப்பட்ட ஒரு பெண் சடலம் வெளியே கிடந்துள்ளது அதைத்தொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த உடலை மீண்டும் நல்லடக்கம் செய்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட மயான பகுதியில் எங்கு தோண்டினாலும் புதைக்கப்பட்ட சடங்களே உள்ள நிலையில் இறந்தவர்களை புதைக்க போதிய இடமில்லாததால் புதிதாக குழி தோண்டும் போது அடிக்கடி இது போன்ற சடலங்கள் வெளியே போடப்படும் அவலநிலை தொடர்ந்து ஏற்படுவதாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு வால்பாறை பகுதியில் மின் மயானம் அமைக்க நகராட்சி மூலம் ரூ 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் அவலநிலை ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் மின்மயானம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!