விழுப்புரம் அருகே இன்று (ஜூலை.4) பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் வேனில் பயணம் செய்த 15 குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகிலுள்ள

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சம்பவ

இடத்திலிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
