Skip to content

பொங்கல் பரிசு: விடுபட்டவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வந்தது.

முறையான டோக்கன் விநியோகம் மூலம் இதுவரை சுமார் 90 சதவீத அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்துள்ள நிலையில், பல்வேறு காரணங்களால் இன்னும் பலர் இப்பரிசைப் பெற்றுச் செல்லவில்லை.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறாத விடுபட்ட அட்டைதாரர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களுக்குரிய ரூ.3,000 ரொக்கப்பணம் மற்றும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை இந்த விநியோகம் தொடரும் என்பதால், விடுபட்டவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!