Skip to content

17 ஆண்டுகள் வங்கிப் பணி… திடீர் பணிநீக்கம்: வங்கிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தடை

இலங்கையிலிருந்து அகதியாக வந்து தமிழகத்தில் வசிக்கும் திருக்கல்யாணமலர் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக எஸ்பிஐ (SBI) வங்கியில் பணியாற்றி வந்தார். அவர் இந்திய குடிமகன் அல்ல என்ற காரணத்தைக் கூறி, வங்கி நிர்வாகம் அவரை திடீரென பணிநீக்கம் செய்தது.இந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, “மனுதாரர் தனது அகதி அடையாளத்தை மறைக்கவில்லை. இந்திய குடிமக்களுக்கு இணையான வாழ்வுரிமை அகதிகளுக்கும் உண்டு. 17 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அவரது குடும்பத்தைப் பாதிக்கும்,” என்று கூறி பணிநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!