கவுண்டமணி, செந்தில் நடித்த பல்வேறு படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் வாசுகி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் இருந்து வந்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவையடுத்து கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிட்டதாகவும் வாசுகி கூறுகிறார்.
“உணவுக்கே வழி இல்லாத சூழல் ஏற்பட்டபோது கைவசம் இருந்த நகைகளை விற்று காலத்தை ஓட்டினேன். தெலுங்கு நடிகர் சங்கம் ஓரளவு உதவி செய்தது.
“நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு அந்த சங்கத்தில் என்னை உறுப்பினராக்க அவரே பணம் செலுத்தினார். சிரஞ்சீவி உள்ளிட்டோர் பணம் கொடுத்து உதவினர். தென்னிந்திய நடிகர் சங்கம் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.
“கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததற்கு நிறைய பணம் செலவானது. தங்கு வதற்கு இடமும் வேலையும் கொடுத்தால் பிழைத்துக்கொள்வேன்,” என்று சொல்லும் வாசுகி, நடிகர் சங்க நிர்வாகி களான நாசர், விஷால் உள்ளிட்டோர் தனக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
என் கையில் பத்து ரூபாய் இருந்தால் தானே நான் டீ கூட குடிக்க முடியும்? கழுத்தில் கிடந்த செயின், காலில் கிடந்த கொலுசு என எல்லாத்தையும் விற்று சாப்பிட்டுவிட்டேன். இப்போது விற்பதற்குக்கூட என்னிடம் எதுவும் இல்லை. எனக்கு குழந்தை, கணவன் எனப் பார்த்துக்கொள்ள யாருமே இல்லை.
எனக்குத் தற்கொலை செய்துகொள்ளவும் மனசு வரவில்லை. அதனால் தயவுசெய்து உங்கள் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு எனக்கு யாராவது ஏதாவது உதவி பண்ணுங்க என அழுதுகொண்டே உதவி கோரியுள்ளார் நடிகை வாரிசு. ஒரு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களை சிரிக்கவைத்த மூத்த நடிகை இன்று சாப்பாட்டுக்கே வழியின்றி நடுரோட்டில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
